Skip to main content

Posts

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப

  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம்

ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்வு

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80உயர்ந்து ரூ.73440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவ

 ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகனை மீட்க அரசுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி 50 இடங்கள் குறைப்பு

  காஞ்சிபுரம் பிஎஸ்பி கல்லூரியில் இவ்வாண்டு MBBS படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024ல் 150 பேரை எம்பிபிஎஸ்-ல் சேர அனுமதித்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் 50 இடம் குறைத்தது. நாடு முழுவதும் இவ்வாண்டு 766 மருத்துவக் கல்லூரிகளில் 1.15 லட்சம் இடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரி, மதுரை எய்ம்ஸ், இஎஸ்ஐசியில் மொத்தம் 12,000 மருத்துவ இடங்கள் உள்ளன.

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட 16 நிமிடங்களில் திரும்பி வந்தது

  சனிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட 16 நிமிடங்களுக்குப் பிறகு தளத்திற்குத் திரும்பியது. விமானம் காலை 6:40 மணிக்கு புறப்பட்டது, ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே காற்றில் இருந்ததாக FlightRadar24 தரவு காட்டுகிறது. "இன்னும் எந்த புதுப்பிப்பும் இல்லை - நாங்கள் விமானத்திற்குள் காத்திருக்கிறோம்... விரக்தியாக இருக்கிறது," என்று விமானத்தில் இருந்து ஒரு பயணி கூறியதாக கூறினார்.

குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

  குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவர் விஷ்ருத் என்பவரை போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர். நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி ஷ்ருதியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஷ்ருதியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்