சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியுள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1502 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 77 கனஅடியில் இருந்து 204 கனஅடியாக உயர்ந்துள்ளது. அங்கே நீரின் இருப்பு 2682 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. புழல் ஏரிக்கு சோழவரம் ஏரியில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் 315 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அங்கு நீர்வரத்து 15 கனஅடியாக குறைந்துள்ளது.
சென்னை குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 40.45% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 41.21%, புழல் – 81.27%, பூண்டி – 3.93%, சோழவரம் – 12.02%, கண்ணன்கோட்டை – 63% நீர் இருப்பு உள்ளது.
புதுடெல்லி: நீட் தேர்வு நாடு முழுவதும் கசிந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில், மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதியனர். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. இன்று காலை மீண்டும் உச்சநீதி...
Comments
Post a Comment