Skip to main content

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவிற்கு தயாராகும் பாரீஸ்

Paris Olympics 2024

உலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர் வீரங்கங்கனைகள் ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் குவிய தொடங்கியுள்ளனர். 33வது ஒலிம்பிக்ஸ் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள் பாரீஸ் நகரில் குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், உருகுவே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் முதல் ஆளாக வந்து சேர்ந்துள்ளனர்.

ஒலிம்பிக்ஸ் கிராமம் மற்றும் அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டை, வில்வித்தை என 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் நகரை ஒட்டிய கிராமத்தில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த 1750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப

  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம்

ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்வு

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80உயர்ந்து ரூ.73440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது.