குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லாவில் உள்ள ஒரு இளம் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இறந்தவர்கள் 34 வயதான விபுல் காஞ்சி வகேலா, அவரது மனைவி 26 வயது மனைவி சோனல், அவர்களது இரண்டு மகள்கள் (11 மற்றும் ஐந்து வயது) மற்றும் எட்டு வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லி: நீட் தேர்வு நாடு முழுவதும் கசிந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில், மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதியனர். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. இன்று காலை மீண்டும் உச்சநீதி...
Comments
Post a Comment