Skip to main content

Posts

Showing posts from July, 2024

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா? – உச்சநீதிமன்றம் கேள்வி

 புதுடெல்லி: நீட் தேர்வு நாடு முழுவதும் கசிந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில், மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதியனர். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. இன்று காலை மீண்டும் உச்சநீதி...

இந்தியர் மரணம்: எள்ளி நகையாடிய அமெரிக்க அதிகாரி பணிநீக்கம்

சியேட்டல்: 2023 ஆம் ஆண்டில் சியேட்டலில் இந்திய மாணவி ஜானவி கன்டுலா சாலை விபத்தில் உயிரிழந்தார். குமாரி ஜானவி கன்டுலா சியேட்டலின் நார்த்ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தார். சாலை விபத்தில், காவல்துறைக்குச் சொந்தமான கார், அதிவேகமாக செலுத்தியபோது அவர் மீது மோதியது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சியேட்டல் காவல்துறையில் ஏற்பட்ட பெரிய சர்ச்சையில், காவல்துறை அதிகாரி டேனியல் ஓடரர் குமாரி கன்டுலாவின் மரணத்தை எள்ளி நகையாடியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் இதைத் தன்னிடம் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவுசெய்திருந்தார். குமாரி கன்டுலாவின் உயிருக்கு மதிப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ஓடரரின் செயல் வெளியே தெரியவந்தபோது, சியேட்டல் மற்றும் இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சியேட்டலின் இடைக்கால காவல்துறை தலைவர், திருவாட்டி சூ ரார், "இப்படிப்பட்ட செயல் மனிதாபிமானமற்றது" என்று கண்டனம் தெரிவித்தார். மேயர் புரூஸ் ஹெரல், ஓடரரின் பணிநீக்கம் சரியான முடிவு என்று கூறினார். கெவின் ஏ. டேவ் என்ற மற்றொரு க...

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவிற்கு தயாராகும் பாரீஸ்

உலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர் வீரங்கங்கனைகள் ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் குவிய தொடங்கியுள்ளனர். 33வது ஒலிம்பிக்ஸ் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள் பாரீஸ் நகரில் குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், உருகுவே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் முதல் ஆளாக வந்து சேர்ந்துள்ளனர். ஒலிம்பிக்ஸ் கிராமம் மற்றும் அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டை, வில்வித்தை என 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் முழுவதும் வர...

செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து: சென்னையின் முக்கிய 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியுள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1502 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 77 கனஅடியில் இருந்து 204 கனஅடியாக உயர்ந்துள்ளது. அங்கே நீரின் இருப்பு 2682 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. புழல் ஏரிக்கு சோழவரம் ஏரியில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் 315 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அங்கு நீர்வரத்து 15 கனஅடியாக குறைந்துள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 40.45% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 41.21%, புழல் – 81.27%, பூண்டி – 3.93%, சோழவரம் – 12.02%, கண்ணன்கோட்டை – 63% நீர் இருப்பு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40,018 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் தொடரும் மழையால் அங்கு உள்ள அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், வினாடிக்கு 31,102 கனஅடியில் இருந்த நீர்வரத்து 40,018 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்துள்ளது.